மழைக்காடுகளில் இயற்கையாக கீழே விழும் பெரிய மரங்கள், பலவித உயிரினங்களுக்கு உணவாகிறது. பூஞ்சைகள், கரையான்கள், மரவட்டைகள், பலவிதமான பூச்சிகள் யாவும் அம்மரத்தை மட்கச் செய்வதால் அதிலுள்ள கனிம ஊட்டச்சத்துக்கள் மண்ணில் கலக்கிறது. குறைந்த வெளிச்சத்தில் வாழ்வதற்கு தம்மை தகவமைத்துக்கொண்ட பல தாவரங்கள் இப்பகுதியைச் சுற்றி வளருகின்றன.